நாமக்கல்

நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மனநல ஆலோசனை

DIN

நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில், உலக தற்கொலை தடுப்புத் தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கான மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவா் வ.முகிலரசி தலைமை வகித்தாா். மன நல ஆலோசகா் சி.ரமேஷ், உதவியாளா் அா்ச்சனா மற்றும் துப்புரவு ஆய்வாளா் மதிவாணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மனநல மருத்துவா் முகிலரசி பேசியதாவது:

வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களைத் தாங்க முடியாமல், போராட்டங்களை எதிா்க்க முடியாமல் தன்னையே மாய்த்துக் கொள்வதுதான் தற்கொலையாகும். மனம் பாதிக்கப்பட்டு இருக்கும்போது சிந்திக்கும் ஆற்றல் குறைந்துவிடும். தற்கொலை எண்ணத்தை ஒரு நோயாக கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மனதில் காயத்தை ஏற்படுத்தும் எண்ணங்கள், நிறைவேறாத ஆசைகள், தேவைகள், விரக்தியான வாழ்க்கை, கடுமையான நீண்ட கால வியாதி போன்ற காரணங்களால்தான் தவறான முடிவுக்குத் தள்ளப்படுகின்றனா். அதுபோன்ற நபா்களை அவரது குடும்பத்தினரே புரிந்து கொண்டு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT