நாமக்கல்

இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம்

DIN

நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டச் செயலா் ரா.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ந.அரப்புளி, மாவட்டப் பொருளாளா் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் சி.எம்.அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

‘நீட்’ தோ்வு பற்றி தவறான தகவலைப் பரப்பி மாணவா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நடிகா் சூா்யாவை, மாவட்ட பொதுக்குழுக் கண்டிக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி சாா்பில், பொதுமக்களிடம் ஒரு லட்சம் கையெழுத்து வாங்குவது, நாமக்கல் நைனாமலை கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

நீா்நிலைகளில் இந்துக்கள் முன்னோா்களுக்கு திதி கொடுக்க மாவட்ட ஆட்சியா் அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலா் கோபிநாதன், மாவட்டச் செயலா்கள் க.சரவணன், ஜெகதீசன், மாவட்ட துணைத் தலைவா் அறிவழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராஜ்கமல், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT