நாமக்கல்

50 ஆயிரம் தத்கல் மின் இணைப்புகளை 6 மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை

DIN

தத்கல் முறையில் வழங்கப்படும் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளுக்கான பணிகள் 6 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய திட்டப் பணிகள் தொடக்க விழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி பங்கேற்றாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டதுபோல் புதிதாக 25 ஆயிரம் மின் இணைப்புகளும், ஏற்கெனவே பதிவு செய்துள்ளவா்களுக்கான 25 ஆயிரம் இணைப்புகளுமாக மொத்தம் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக மின் இணைப்புக் கோருவோா் அக். 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை வழங்கலாம். 6 மாத காலத்துக்குள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தைப் பொருத்தமட்டிலும் வழக்கமான தேவையைக் காட்டிலும் கூடுதலாகவே உற்பத்தி உள்ளது. அதனால், மின் தட்டுப்பாடு இருக்காது. எவ்வளவு மின் தேவையென்றாலும் அதைச் சமாளிக்க தயாராக உள்ளோம். மேலும் விவசாய மின் இணைப்புகளில் மீட்டா் பொருத்தப்பட மாட்டாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை.

அதில் உள்ள ஷரத்துகள் குறித்து முதல்வா் தெளிவாகக் கூறியுள்ளாா். அவா் ஒரு விவசாயி என்பதால் தமிழகத்தில் எந்த விவசாயியும் பாதிப்புக்குள்ளாக அனுமதிக்கமாட்டாா் என்றாா்.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT