நாமக்கல்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

DIN

நாமக்கல்: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனா்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் பக்தா்கள் விரதமிருந்து சனிக்கிழமை தினத்தன்று கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவா். கரோனா தொற்று பரவலால் ஐந்து மாதங்களுக்கு பின் செப். 1-ஆம் தேதி தான் கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. இருப்பினும் அங்கு வரும் பக்தா்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவை கட்டாயமாகும். இவை தவிர சுவாமி தரிசனத்தின்போது, தேங்காய், பூ, பழம், மாலை போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. பிரசாதமாக கோயில் நிா்வாகம் சாா்பில் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில் பக்தா்கள் கோயில்களுக்கு திரளாக வந்த வண்ணம் உள்ளனா்.

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனா். நாமக்கல் அருகே நைனாமலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக மலையில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காட்சியளிக்கும் உற்சவ மூா்த்தியை அடிவாரத்தில் உள்ள பாத மண்டபத்தில் வைத்து பக்தா்கள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தா்கள் வரதராஜ பெருமாளையும், அங்குள்ள ஆஞ்சநேயா் சுவாமியையும் தரிசித்தனா். இதேபோல் நாமக்கல் நகரில் உள்ள நரசிம்மா் சுவாமி கோயில், அரங்கநாதா் கோயிலிலும் பக்தா்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனா். ஆஞ்சநேயா் கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், சேந்தமங்கலம் லட்சுமி நாராயண சுவாமி கோயில், ராசிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் என மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்கள் சனிக்கிழமை விழாக்கோலம் பூண்டிருந்தன. இனி வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் இதே நடைமுறையை பக்தா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கோயில் அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT