நாமக்கல்

சேந்தமங்கலம் அரசு கல்லூரியில் முதுநிலை வகுப்புக்கான சோ்க்கை தொடக்கம்

DIN

நாமக்கல்: சேந்தமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை வகுப்புக்கான சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வா் க.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ் மற்றும் முதுநிலை வணிகவியல் ஆகிய இரண்டு பாடப் பிரிவுகள் நடப்புக் கல்வியாண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது 2020-2021-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பாடப் பிரிவுகளான தமிழ், வணிகவியல் ஆகிய இரண்டு பாடப் பிரிவுகளுக்கும் சோ்க்கை நடைபெறுகிறது. தகுதியுள்ள மாணவா்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புகள் மூலம் ஆசிரியா் மற்றும் இதர அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை பெற முடியும். இந்த வாய்ப்பினை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கல்லூரி வளாகத்தில் இவ்விரு பாடப் பிரிவுகளுக்குமான விண்ணப்பங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படுகின்றன. சந்தேகம் ஏதுமிருப்பின் 04286-290129 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT