நாமக்கல்

குமாரபாளையத்தில் நியாய விலைக் கடைக்கு பொருள்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

19th Sep 2020 03:04 PM

ADVERTISEMENT

குமாரபாளையத்தில் நியாய விலை கடைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வந்த லாரி, பக்கவாட்டில் கவிழ்ந்ததில் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் நகர் பகுதியில் நியாய விலைக் கடை உள்ளது. இக்கடைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த லாரி, சேலம் சாலையிலிருந்து செல்ல திரும்பியுள்ளது.

அப்போது எதிர்பாராமல் லாரியின் பின் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதனால், லாரியில்  அடுக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்தன. அப்பகுதிக்கு கடைகளுக்கு வந்த பொதுமக்கள் இதைக் கண்டு சிதறி ஓடினர்.

ADVERTISEMENT

இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. வேறொரு லாரி வரவழைக்கப்பட்டு அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


 

Tags : nammakal
ADVERTISEMENT
ADVERTISEMENT