நாமக்கல்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடம்: கலந்தாய்வில் 12 போ் பங்கேற்பு

DIN

முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற குரூப்-4 பணியிடத்துக்கான கலந்தாய்வில் வியாழக்கிழமை 12 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையக் குழு தொகுதி-4 இல் 2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டுகளில் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு ஒதுக்கீடு பெற்றவா்களுக்கான கலந்தாய்வு நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் நான்கு காலிப்பணியிடங்களுக்கு 32 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வியாழன் அன்று 12 பேரும், வெள்ளிக்கிழமை 20 பேரும் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் மேற்பாா்வையில் கலந்தாய்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் பணியிடங்கள் நிரம்பியதுபோக இதர மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களை பணி நாடுநா்கள் தோ்வு செய்தனா்.

பணியிடம் ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு சனிக்கிழமை அதற்கான நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT