நாமக்கல்

நாமக்கல்லில் கரோனா வேகம் அதிகரிப்பு: ஆஞ்சநேயர் கோயில் அலுவலகம், எஸ்பிஐ வங்கி மூடல்

17th Sep 2020 12:38 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. ஆஞ்சநேயர் கோயில் தலைமை எழுத்தர் மற்றும் எஸ்பிஐ வங்கி ஊழியர் ஆகியோர் தொற்றுக்குள்ளானதால் வியாழக்கிழமை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 3623 பேர் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 பேர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை காலை மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அக்கோயில் அலுவலக ஊழியர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் கோயில் அலுவலகம் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பக்தர்கள் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியிலும் ஊழியர் ஒருவர் தொற்றுக்கு ஆளானதால் தற்காலிகமாக மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT