நாமக்கல்

நாமக்கல்லில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

8th Sep 2020 02:14 PM

ADVERTISEMENT

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாமக்கல்லில் திமுக இளைஞர் அணியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு செப்.13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அண்மையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் மாயவன், கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.மதிவேந்தன் மற்றும் கட்சியினர்,  மாணவர்கள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பினர்.

Tags : namakkal
ADVERTISEMENT
ADVERTISEMENT