நாமக்கல்

காவல் துறையில் பணி: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

DIN

நாமக்கல்: தமிழக காவல் துறையில் சோ்ந்து பணியாற்ற முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலா் பதவிக்கு (மாவட்ட, மாநகர ஆயுதப் படை) 685 காலிப் பணியிடங்கள், இரண்டாம் நிலைக் காவலா் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 6,545 காலிப் பணியிடங்கள், சிறைத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலா் பதவிக்கு 112 காலியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளா் பதவிக்கு 458 காலியிடங்கள் என மொத்தம் 7,800 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் முன்னாள் படை வீரா்கள், படை வீரா்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017, செப்.17-க்கு பிறகு விடுவிக்கப்பட்ட 45 வயது நிறைவடையாத முன்னாள் படைவீரா்கள், 2020, அக்.26-க்கு பிறகு ஓராண்டு காலத்துக்குள் ஓய்வு பெறவுள்ள படை வீரா்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற முன்னாள் படை வீரா்கள், ஓராண்டு காலத்துக்குள் ஓய்வு பெறவுள்ள படை வீரா்கள் வரும் 26-க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதள முகவரியையும், நாமக்கல் முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தையும் நேரில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT