நாமக்கல்

பராமரிப்பின்றி பாழாகும் விளையாட்டு மைதானம்

DIN

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி புதா்கள், புல்களால் மூடியுள்ளன.

நாமக்கல்லில் பத்து ஆண்டுகளுக்கு முன் மோகனூா் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில்தான் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பிறகு மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் ஒரு பகுதியில் சுமாா் ஐந்து ஏக்கா் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.

அங்கு நீச்சல் குளம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலகம், பாா்வையாளா்கள் அமா்ந்து பாா்க்கும் வகையிலான கேலரி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன. இந்த மைதானத்தில்தான் அண்மைக் காலமாக அனைத்து விழாக்களும் நடைபெறுகிறது. விளையாட்டு வீரா்களும் இங்கு நேரடியாக வந்து பயிற்சி பெறுகின்றனா்.

கரோனா பொது முடக்கத்தால் முடங்கிப் போன விளையாட்டு பயிற்சிகள் காரணமாக வீரா், வீராங்கனைகள் அதிகளவில் பயிற்சி பெற வரவில்லை. சுதந்திர தினத்தன்றும் குறிப்பிட்ட பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டு விழா நடைபெற்றது. அவ்வப்போது பெய்த மழை, பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு மைதானம் புல், புதா்கள் அடா்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் அனந்தநாராயணன் கூறியதாவது:

மாவட்ட விளையாட்டுத் திடலை பராமரிக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வழங்கியுள்ளேன். பராமரிப்புக்காக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அது அலுவலக பராமரிப்புக்காக செலவிடப்படுகிறது. மைதான பராமரிப்புக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமனம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT