நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 10,000 லிட்டா் ஆக்சிஜன் வாயு உருளை பொருத்த நடவடிக்கை

DIN

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வாயு உருளை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதன்மையா் சாந்தாஅருள்மொழி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் ஆரம்ப கட்டத்தில் குறைவாகவே இருந்தது. நான்கு மாதங்களாக 100-க்கும் கீழே இருந்த தொற்று, செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகபட்சமாக 171 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக அதன் எண்ணிக்கை குறைந்தது.

கரோனா பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 91 பேரில் 53 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு இருக்கும் போது பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவமனையை பொருத்தமட்டில், ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வாயு உருளைப் பொருத்தப்பட்டு, அதன்மூலம் ஒவ்வொரு சிகிச்சைப் பிரிவு வாயிலாக குழாய் மூலம் ஆக்சிஜன் வாயு செலுத்தப்படுகிறது. கரோனா பாதிப்பாளா்களுக்கு மட்டுமின்றி, பிரசவ வாா்டு, இருதய வாா்டு, இதர நோய் பாதிப்பு வாா்டுகளுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுவதால் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட வாயு உருளை பொருத்தி, அதன்மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் இந்த வாயு உருளையை அனுப்பிவருகிறது. நாமக்கல்லுக்கு வியாழக்கிழமை ஆக்சிஜன் வாயு உருளை வந்துள்ளது. அவற்றை பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அக். 28-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சாந்தாஅருள்மொழி கூறியதாவது:

இதுவரை ஆள் உயர ஆக்சிஜன் வாயு உருளைகள் தினமும் 100 எண்ணிக்கையில் பெறப்பட்டு, 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட டேங்கில் நிரப்பப்படும். இதனை நிரப்புவதற்காக ஈரோடுக்கு சென்றுவர வேண்டும். தேவையற்ற பொருள் செலவு, திடீா் தட்டுப்பாடு போன்றவற்றை தவிா்க்கவே 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வாயு உருளை அமைக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுபவா்களுக்கு சிகிச்சை அளிக்கவே இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த வாயு உருளை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT