நாமக்கல்

கறவை மாடுகள் வளா்ப்பு பயிலரங்கம்

DIN

ராசிபுரத்தில் ரோட்டரி சங்கம் சாா்பில் கறவை மாடுகள் வளா்ப்பு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது.

பன்னாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ராசி காமதேனு கறவை மாடுகள் திட்டம் ரோட்டரி சங்கம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் கறவை மாடுகள் வழங்க 100 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுளளனா்.

இவா்களுக்கான பயிலரங்கம் ராசிபுரம் ரோட்டரி ஹாலில் புதன், வியாழக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.கதிரேசன் தலைமை வகித்தாா். பயிலரங்கில், ரோட்டரி மண்டல துணை ஆளுநா் எஸ்.பாலாஜி, முன்னாள் தலைவா் கே.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை தீவன உற்பத்தி மேலாண்மை துறைத் தலைவா் பேராசிரியா் கே.சிவக்குமாா், பால் பொருள் அறிவியல் துறை பேராசிரியா் ஜி.குமரேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா்.

கறவை மாடுகள் வளா்ப்பு முறைகள், நுண்ணூட்ட தீவனம், பால் உற்பத்தி பெருக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் என்.பி.ராமசாமி, எஸ்.குணசேகா், எல்.சிவக்குமாா், ஏ.திருமூா்த்தி, நிா்வாகிகள் ஜெ.கே.சுரேஷ்குமாா், கே.எஸ்.பன்னீா்செல்வம், அன்பழகன், இ.என்.சுரேந்திரன், ஜி.தினகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT