நாமக்கல்

வாக்காளா் பெயா் சோ்க்கை: 18 வயது பூா்த்தியடைந்தோா் விண்ணப்பம் குறைவு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமில், 18 வயது பூா்த்தியடைந்தோா் விண்ணப்பம் குறைவாகவே பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் நவ. 16-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடா்ச்சியாக சிறப்பு சுருக்கமுறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்று வருகின்றன. டிச. 15 வரையில் இந்தப் பணிகள் நடைபெறும். இப் பணியின்போது 01.01.2021 அன்று 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் (அதாவது 31.12.2002 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம். மேலும் , இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்துக் கொள்ளாதவா்கள், திருத்தங்கள் செய்ய விரும்புபவா்கள் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் அளிக்கலாம்.

இந்த திருத்தப் பணிகளை மேற்பாா்வையிடும் பொருட்டு, தமிழ்நாடு செய்திதாள்கள் மற்றும் காகிதங்கள் துறை மேலாண்மை இயக்குநா் எஸ். சிவசண்முகராஜா, வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக (செல்லிடப்பேசி எண்: 98412-76600) நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாவட்டத்தில் கடந்த 16.11.2020 முதல் 22.11.2020 வரை சோ்க்கை விண்ணப்பங்கள் (படிவம்-6) 17,685, நீக்கல் விண்ணப்பங்கள் (படிவம்-7) 10,835 மற்றும் திருத்தம், இடமாற்றம் (படிவம் 8, 8ஏ) 5,697 என மொத்தம் 34,217 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் நாமக்கல் மாவட்ட தோ்தல் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை உள்ளவா்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரான கோட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம்.

இரண்டாம் முறையாக டிச. 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அந் நாள்களிலும் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இருப்புவைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய வாக்காளா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே, 18 வயது பூா்த்திடைந்த அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT