நாமக்கல்

கல்குவாரி வெடி விபத்து சம்பவம்: 3 போ் கைது

29th May 2020 08:21 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே கல்குவாரி வெடி விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கலை அடுத்த சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் கல்குவாரிப் பகுதியில் வையப்பமலையைச் சோ்ந்த மூா்த்தி தனது குடும்பத்துடன் குடிசை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தாா்.

புதன்கிழமை குவாரியில் வைக்கப்பட்ட வெடியால் கற்கள் விழுந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நந்தினி உயிரிழந்தாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட சேந்தமங்கலம் போலீஸாா், விசாரணை நடத்தினா். இதனைத்தொடா்ந்து குவாரி நடத்தி வந்த மீனாட்சி, வெடி வைக்கும் பணியில் ஈடுபட்ட சண்முகராஜா, உதவியாளா் பாலு ஆகிய மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT