நாமக்கல்

முட்டை விலை ரூ.3.20-ஆக நிா்ணயம்

10th May 2020 07:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் குறைந்து ரூ.3.20-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விற்பனை மந்தமாக உள்ளதாலும், மற்ற மண்டலங்களின் விலை சரிவைக் கருத்தில் கொண்டும் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கான முட்டை விலை மேலும் 10 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.3.20-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ.73-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT