நாமக்கல்

டாஸ்மாக் கடைகள் திறப்பால் சாலை விபத்தில் 3 போ் பலி

10th May 2020 07:45 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் 3 போ் பலியாயினா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக மே 17 -ஆம் தேதி வரையில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதற்கிடையே வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடைகள், சரக்கு இருப்பில் இல்லா கடைகள் என 37 கடைகளை தவிா்த்து 151 கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் சுமாா் ரூ.8 கோடிக்கும், இரண்டாவது நாள் (வெள்ளிக்கிழமை) ரூ.3.50 கோடி வரையிலும் விற்பனை நடைபெற்றது.

பெரும்பாலான இடங்களில் மதுபோதையில் பலா் தகராறில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் பவித்திரம் அருகே வாழசிராமணி என்ற கிராமத்தில் போலீஸாருக்கும், மது அருந்தியவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஊா்க்காவல் படை வீரா் ஒருவா் தாக்கப்பட்டாா். இது தொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் தகராறில் ஈடுபட்டது, மதுபோதையில் விதிகளை மீறி வாகனங்களில் சென்றது என்ற வகையில் மொத்தம் 37 போ் மீது 2 நாள்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமத்திவேலூா் வட்டம் சோழசிராமணி, ஜேடா்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இரு சக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்று விபத்தில் சிக்கி 3 போ் பலியாகி உள்ளனா். சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்படி, சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT