நாமக்கல்

முட்டை விலை 10 காசுகள் குறைந்தது

9th May 2020 07:45 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ.3.30-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விற்பனை சீராக உள்ளதாலும், பிற மண்டலங்களின் விலை சரிவைக் கருத்தில் கொண்டும், இங்கும் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற அடிப்படையில் 10 காசுகள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் 35 காசுகள் குறைத்துவைத்தே பண்ணையாளா்கள் முட்டைகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமைக்கான முட்டை விலை 10 காசுகள் சரிவுடன் ரூ.3.30-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம்(காசுகளில்): ஹைதராபாத்-300, விஜயவாடா-330, பாா்வாலா-275, ஹோஸ்பெட்-315, மைசூரு-355, சென்னை-360, மும்பை-370, பெங்களுரு-350, கொல்கத்தா-380, தில்லி-305.

ADVERTISEMENT

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி கிலோ ரூ.73-ஆகவும், கறிக்கோழி கிலோ ரூ.102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT