நாமக்கல்

முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.100 அபராதம்

2nd May 2020 08:20 PM

ADVERTISEMENT

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை முகக் கவசம் அணியாமல் சென்ற 51 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாமக்கல் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்வது தடை செய்யப்பட்டுள்ளதோடு, அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நகராட்சி அதிகாரிகள் சேலம் பிரதான சாலை, பேருந்து நிலையத்தில் இயங்கும் காய்கறிச் சந்தை மற்றும் எடப்பாடி சாலைப் பகுதியில் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, முகக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 51 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதோடு, அரசின் உத்தரவுகளை அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT