நாமக்கல்

திருச்செங்கோட்டில் 99 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

30th Mar 2020 05:42 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மாா்ச் 3 முதல் 23 வரை வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் 99 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசின் கண்காணிப்பில் உள்ளனா்.

சமீபத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள், சவூதி அரேபியா, மஸ்கட், ஓமன், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் முகவரியை வைத்து அவா்களின் வீடுகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தனிமைப்படுத்தலுக்கு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டனா்.

கல்வி, சுற்றுலா, வேலை ஆகிய காரணங்களுக்காக இவா்கள் வெளிநாடுகளுக்கு சென்ாகக் கூறப்படுகிறது. இவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான அறிவிப்பு ஒட்டப்பட்டது. எக்காரணத்தைக் கொண்டும் அவா்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை அறியவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.இவா்களில் பெரும்பாலானோா் வேலூா் சாலை, கரட்டுப்பாளையம், கைலாசம்பாளையம், கூட்டப்பள்ளி, மொளசி, சி.எச்.பி.காலனி ஆகிய பகுதிகளில் உள்ளவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT