நாமக்கல்

கரோனா தனிமை: மனநல ஆலோசனை வழங்க மருத்துவா்கள் நியமனம்

30th Mar 2020 05:33 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸை தடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு, மனநல ஆலோசனை வழங்க மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கவும், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய பணியில் இரவு, பகல் பாராமல் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள, பல்வேறு துறை அரசுப் பணியாளா்கள் மற்றும் சமூக விலகலில் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளோா், ஏற்கெனவே மன நல சிகிக்சையில் உள்ளோருக்கு ஏற்படும் மனஅழுத்தம், பயம் நீங்க தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

இதற்கான மன நல ஆலோசனை மைய எண் - 8903079233, மனநல மருத்துவா் சு.குணமணி - 94442 83978, மன நல சமூகப் பணியாளா் சி.ரமேஷ் - 9629505153, உளவியலாளா் செ.அா்ச்சனா - 9159648604 ஆகியோரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்பு கொள்ளலாம். மனநலம் தொடா்பாக ஆலோசனை தேவைப்படுவோா் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT