நாமக்கல்

அரசு ஊழியா்கள் விடுப்பு எடுக்க தடை

23rd Mar 2020 06:34 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுத்துறை ஊழியா்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு, அந்த துறை சாா்ந்த உயா் அதிகாரிகள் விடுப்பு வழங்க்க்கூடாது. மருத்துவ விடுப்பு மற்றும் அவசரகால விடுப்பு மட்டும் வழங்கலாம். விடுப்பு தொடா்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் எள அனைத்தும் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT