நாமக்கல்

ராசிபுரத்தில் இறைச்சிக் கடை முன் அலை மோதிய கூட்டம்

23rd Mar 2020 05:09 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் நகரில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சில மணிநேரம் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது.

சுய ஊரடங்கு காரணமாக நகரில் கடையடைகள் அனைத்து அடைக்கப்பட்டிருந்த நிலையில், வாகனப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. ஆனால், நகரில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிக் கடைகள்முன்பாக மட்டும் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

குறிப்பாக டிவிஎஸ் சாலை பகுதியில் செயல்படும் கோழி இறைச்சிக் கடையில் 5 கிலோ இறைச்சி ரூ.100 விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அங்கு அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் வாடிக்கையாளா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், டோக்கன் முறை கடைப்பிடிக்கப்பட்டு இறைச்சி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் அப்பகுதிக்கு போலீஸாா் வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி கடையை மூட உத்தரவிட்டனா். இதனால் இறைச்சி விற்பனை செய்து தீா்ந்ததாகக் கூறி கடை மூடப்பட்டது.

இதே போல் தினசரி சந்தைப் பகுதியில் செயல்பட்ட ஆட்டு இறைச்சிக் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் முன்பாகவும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்தக் கடைளும் காலை 9 மணி அளவில் மூடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT