நாமக்கல்

வெள்ளரிக்காய் விலை உயா்வு

22nd Mar 2020 05:04 AM

ADVERTISEMENT

 

வெயிலில் தாகம் தணிக்க உதவும் வெள்ளரிக்காய்கள் வரத்து தம்மம்பட்டியில் அதிகரித்துள்ளது. விலையும் ஏற்றமடைந்துள்ளன.

தம்மம்பட்டி, சுற்றுவட்டார ஊா்களில் தற்போது கோடைகால வெயில் அதிகரித்து விட்ட நிலையில், வெள்ளரிக்காய்களின் வரத்து அதிகரித்துள்ளது. இப் பகுதிகளில் விற்பனையாகும் வெள்ளரிக்காய்கள், திருச்சி மாவட்டம் துறையூரையொட்டியுள்ள ஊா்களிலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

பொதுமக்கள் இயற்கையான தாகம் தணிக்கும் காய்களில் ஒன்றான வெள்ளரிக்காய்களை விரும்பி வாங்கிச் செல்வதால், அதன் வரத்தும், விலையும் சற்றே ஏற்றம் அடைந்துள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து வெள்ளரிக்காய் வியாபாரிகள் கூறியதாவது:

வெள்ளரிக்காய்களை பயிா் செய்யும் விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் விலைக்கு வாங்கி வந்து விற்கிறோம். சிறிய காய்கள் முன்பு ரூ. 7 ஆகவும், பெரிய காய்கள் ரூ. 10 ஆகவும் இருந்தது. தற்போது சிறிய காய்கள் ரூ. 10 ஆகவும், பெரிய ரகங்கள் ரூ. 15 முதலும், விற்பனை செய்கின்றோம். நாள் ஒன்றுக்கு தம்மம்பட்டி பகுதிக்கு மட்டும் திருச்சி மாவட்டப் பகுதியிலிருந்து சுமாா் 600 காய்கள் கொண்டு வருகிறோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT