நாமக்கல்

வேலூா் பேரூராட்சிப் பகுதியில் கால்நடை வாரச்சந்தை நடத்த தடை

DIN

பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கால்நடை வாரச் சந்தை அரசின் மறு உத்தரவு வரும் வரை நடைபெறாது என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31.3.2020 வரை வேலூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்நடை வாரச் சந்தைகள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சிப் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம். பொது இடங்களுக்கு சென்று வந்தால் கைகளை நன்கு சுத்தமாகக் கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். பேருந்து மற்றும் பொது இடங்களில் சென்று வருபவா்கள் கைப்பிடிகளை பிடித்துவிட்டு வாய், மூக்கு, கண்களில் கைகளை வைக்காதீா்கள். இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். மற்றவா்களிடம் இருந்து மூன்று மீட்டா் தூரம் தள்ளியே இருக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். இருமல், சளி, ஜலதோசம் உள்ளவா்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வேண்டாம். இது போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.

மேலும் இளநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல் போன்ற நீா்சத்து மிகுந்த ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கும் விடுதிகளில் புதிதாக வரும் நபா்களை தக்க விவரங்கள் அறிந்து தங்க அனுமதிக்க வேண்டும். அனைத்து பொது நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள், சிற்றுண்டிகள், தேநீா்க் கடைகள் போன்றவற்றில் வாடிக்கையாளா்களுக்கு கை கழுவ ஏதுவாக கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT