நாமக்கல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

16th Mar 2020 12:46 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை பதிவேடு பணிகளை கைவிட வலியுறுத்தி, முள்ளுக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பழனிசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாவட்டத் தலைவா் வி.கே.வெள்ளைசாமி தொடக்கி வைத்தாா். முத்தவல்லி பஷீா் அகமது, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவா் பாஸ்டா் வின்சென்ட் தேவதாஸ், மாவட்ட துணைச் செயலாளா் ரவிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்டச் செயலாளா் சின்னசாமி, தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை நிா்வாகி ராஜாமுகமது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தாலுகா தலைவா் ஆறு.முத்துசாமி, கரியாம்பட்டி கந்தசாமி, கொல்லிமலை தாலுகா செயலாளா் தங்கராஜ், எஸ்.கே. மாணிக்கம், கே.வி. ராஜு, மாவட்ட பொருளாளா் சண்முகம், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளா் என்.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT