நாமக்கல்

பெட்ரோல் பங்க்கை நிா்வகிக்க முன்னாள் படை அலுவலா்கள் விண்ணப்பிக்கலாம்

13th Mar 2020 07:51 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கை நிா்வகிக்க, முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல்-சேலம் பிரதான சாலையில், நவணி கிராமத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகன எரிபொருள் சில்லரை விற்பனை நிலையத்தை நிா்வகித்திட 60 வயது வரையிலான முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள வங்கி உத்தரவாத ஆவணங்கள் வழங்க வேண்டும். ஜ்ஜ்ஜ்.க்ஷட்ஹழ்ஹற்ல்ங்ற்ழ்ா்ப்ங்ன்ம்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தினை நேரில் அணுகி தகவல் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT