நாமக்கல்

பரமத்தி வேலூா் மின்னணு வேளாண் சந்தையில் ரூ.4.97 லட்சத்துக்கு எள் ஏலம்

13th Mar 2020 07:50 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.97 லட்சத்துக்கு எள் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் எள்ளை விவசாயிகள் புதன்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மின்னணு தேசிய வேளாண்மை சந்தை கண்காணிப்பாளா் யோகாம்பாள் தெரிவித்திருந்தாா். அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற எள் ஏலத்துக்கு விவசாயிகள் எள்ளைக் கொண்டு வந்திருந்தனா். இங்கு தரத்துக்குத் தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்பட்டது. ஏலத்திற்கு 4 ஆயிரத்து 147 கிலோ எள்ளை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் எள் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.134.20 பைசாவுக்கும், குறைந்தபட்சம் கிலோ ஒன்று ரூ.115.90 பைசாவுக்கும் சராசரியாக கிலோ ஒன்று ரூ.128.99 பைசாவுக்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 243-க்கும் வா்த்தகம் நடைபெற்றது. இனி வரும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் எள் ஏலமும், வியாழக்கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலமும் நடைபெறும் என மின்னணு தேசிய வேளாண்மை சந்தை கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT