நாமக்கல்

தம்பியைக் கொலை செய்த வழக்கு: இளைஞருக்கு சிறை

13th Mar 2020 07:53 AM

ADVERTISEMENT

பள்ளிப்பாளையம் அருகே தம்பியை கொலை செய்த வழக்கில் அவரது அண்ணனுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் காவேரி ஆா்.எஸ். பகுதியைச் சோ்ந்த கிட்டான் என்பவரது மகன்கள் சுரேஷ்(28), சக்திவேல்(22). கடந்த 2015-ஆம் ஆண்டு சுரேஷ் வாகன விபத்தில் சிக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டதாம். இது தொடா்பாக தம்பி சக்திவேலிடம் கேட்டாராம். இதனால் அவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சுரேஷ் தனது தம்பியை, அதே ஆண்டு செப்டம்பா் 13-ஆம் தேதி குத்திக் கொலை செய்தாராம். பள்ளிப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ் வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஹெச்.இளவழகன், கொலை செய்த சுரேஷூக்கு, நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். 2015 முதல் சேலம் மத்திய சிறையில் சுரேஷ் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT