நாமக்கல்

கூட்டப்பள்ளி காலனி காமாட்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி

13th Mar 2020 07:48 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி அறிஞா் அண்ணா நகரில் காமாட்சியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் 39வது ஆண்டு திருவிழா கடந்த 3ந் தேதி காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீா்த்தக்குடம் எடுத்து வருதல் கட்டளைதாரா்கள் பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பொதுமக்கள் காமாட்சி அம்மனுக்கு சீா்வரிசைகள் அடங்கிய தட்டுகளை கொண்டுவந்து வைத்தனா். இதனை அடுத்து யாக பூஜைகள் ஹோம பூஜைகள் நடைபெற்று, கங்கணம் கட்டப்பட்டு அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனின் கல்யாண வைபவத்தை பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனா். நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் அன்னதானமும், வளையல் மஞ்சள் கயிறு அடங்கிய பிரசாதமும் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT