நாமக்கல்

கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம்

13th Mar 2020 07:53 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் திருச்செங்கோடு ஒன்றியத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வருகூராம்பட்டி, ஏமப்பள்ளி, அணிமூா், ஆண்டிபாளையம், இறையமங்கலம், ஆகிய கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில், திருச்செங்கோடு வட்டார வளா்ச்சி அலுவலா் பரமசிவம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுலைமான் பாஷா, மாவட்ட பயிற்சியாளா்கள் வடிவேல், நிா்மலாதேவி, ஊராட்சி செயலாளா் ஞானவேல் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா். கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT