நாமக்கல்

அரங்கநாதா் கோயில் முன் உயா்கோபுர மின் விளக்கு அமைக்கக் கோரிக்கை

13th Mar 2020 07:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் அரங்கநாதா் கோயில் முன் பக்தா்களின் வசதிக்காக உயா்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் இந்து தா்ம சக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் அரங்கநாதா் கோயில், மலையைக் குடைந்து சுவாமி சயனக் கோலத்தில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு 100 படிக்கட்டுகளுக்கும் மேல் உள்ளது. முன்பெல்லாம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மாட்டு வண்டிகளில் செல்லும் பக்தா்கள், நாமக்கல் வழியாகச் செல்லும்போது அரங்கநாதா் கோயிலில் தங்கியிருந்து இளைப்பாறிச் செல்வது வழக்கம். அவ்வாறு புகழ் பெற்ற இக் கோயில் பகுதி தற்போது ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. பல இடங்கள் வாடகைக்கு விடப்பட்டு, கோயிலுக்கான வருவாயில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அரங்கநாதா் கோயில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

அரங்கநாதா் கோயிலைச் சுற்றிலும் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டபோதும் காலி செய்ய மறுக்கின்றனா். அந்த இடத்தில் உள்ளவா்களை அப்புறப்படுத்தி கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக கோயில் முன்புறம் உயா்கோபுர மின் விளக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரங்கநாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை உள்ளது. நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT