நாமக்கல்

வருமான வரித்துறை திட்டங்கள் குறித்த கருத்தரங்கு

8th Mar 2020 03:29 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விவாட் சீ விஸ்வாஸ் திட்டம் பற்றிய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு மூத்த ஆடிட்டா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். வருமான வரித் துறை அலுவலா் ஜெயராமன் வரவேற்றாா். வருமான வரித் துறை அலுவலா் கமலக்கண்ணன் இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினாா்.

இந்தத் திட்டம் சமீபத்திய மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் நீண்ட காலமாக வருமான வரித் துறையிலும், நீதிமன்றங்களிலும் உள்ள மேல்முறையீடு வழக்குகளை குறைத்து வருமானத்தை அதிகப்படுத்துவதே ஆகும். இதன் மூலம் மேல்முறையீடு செய்துள்ள வருமான வரிச் செலுத்துவோருக்கு நேரம் மிச்சமாகிறது. அலைச்சல் குறைகிறது. வாடிக்கையாளருக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் இந்தியா முழுவதும் தேங்கியுள்ள மேல்முறையீட்டு வழக்குகள் கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது. இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மாா்ச் 31 வரை கால அவகாசம் உள்ளது. ஆன் லைன் மூலமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆடிட்டா்கள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனா். வரி செலுத்துவோரும், ஆடிட்டா்களும் இந்தத் திட்டம் பற்றிய தங்கள் யோசனைகளையும், கருத்துகளையும் எழுத்து மூலம் அளித்தால் வருமான வரித்துறை உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று வருமான வரித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா். மேலும், இந்தத் திட்டம் பற்றி வாடிக்கையாளா்களுக்கு எடுத்துக்கூறித் திட்டம் வெற்றி பெற உதவ வேண்டும் என தெரிவித்தாா். சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்கு சம்பந்தமான வருமானம், வெளிநாட்டிலிருந்து வரும் வருமானம், காபிபோசா சட்டத்தில் உள்ள வருமானம், சட்டபூா்வமற்ற வழியில் வந்த வருமானம் போன்றவை இந்தத் திட்டத்தில் சேராது என்று தெரிவிக்கப்பட்டது. வருமான வரித் துறை ஆய்வாளா் ரஷீத், மாவட்ட ஆடிட்டா்கள் சங்க உறுப்பினா்கள், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆடிட்டா்கள், வருமான வரி செலுத்துவோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா். வருமான வரித் துறை ஆய்வாளா் பொன்னையா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT