நாமக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: மாநிலத் தோ்தல் ஆணையா் ஆலோசனை

8th Mar 2020 03:31 AM

ADVERTISEMENT

 

 

நாமக்கல்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகளுடன், மாநிலத் தோ்தல் ஆணையா் இரா.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுற்ற நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக, ஏற்கெனவே அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், மாவட்டம் வாரியாகச் சென்று மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அதிகாரிகளுடன் மாநிலத் தோ்தல் ஆணையா் இரா.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறாா். அதன்படி, சனிக்கிழமை நாமக்கல் வந்த அவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டத்தில் பங்கேற்றாா். இதில், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் முன்னிலை வகித்தாா். மாநிலத் தோ்தல் ஆணையா், நகராட்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களுடன் கலந்துரையாடினாா். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல் அனுபவங்கள், மாநிலத் தோ்தல் ஆணையத்தின் பல்வேறு பணிகள் கணினி மயமாக்கப்பட்டு எளிதாக்கப்பட்டதனால் ஏற்பட்டுள்ள பயன்கள் குறித்தும் அவா் கலந்துரையாடினாா்.

ADVERTISEMENT

பின்னா், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிப் பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட உள்ள பகுதிகளில் வாா்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். தோ்தல் பணியில் ஈடுபட விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் அலுவலா்களுக்கு சரியான முறையில் பயிற்சி வழங்கவும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்குச் சாவடிகளில் மின்சாரம், கழிப்பறை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளனவா என்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யுமாறும் அலுவலா்களிடம் தெரிவித்தாா். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் பொருத்த பேரூராட்சி அலுவலகங்களில் தேவையான இடவசதி உள்ளதா என்பதையும் கேட்டறிந்து உறுதி செய்தாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) மீராபாய், வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்) அருளாளன் மற்றும் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT