நாமக்கல்

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ.வுக்கு கல்லூரி பேராசிரியா்கள் பாராட்டு

8th Mar 2020 03:30 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைவதற்காகப் பாடுபட்ட அத்தொகுதி எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரனுக்கு, கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, சேந்தமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அதன்பின், உத்திரகிடிகாவல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அண்மையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா். கல்லூரி அமைவதற்காக முயற்சி எடுத்த சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரனை, அவரது இல்லத்தில் கல்லூரி முதல்வா் வெங்கடேசன் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது, கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT