நாமக்கல்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

8th Mar 2020 03:33 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே இளம்பெண் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கெங்கவல்லி அருகே வீரகனூரையடுத்த கிழக்குராஜபாளையத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி லதா (32). இவா்களிருவரும் திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகின்றனா். இவா்களது மகன்கள் சிவா, சுரேந்தா் ஆகிய இருவரும் பெரம்பலூா் மாவட்டம், பீலூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில், மனோகரன், லதா ஆகிய இருவரும் கடந்த மாதம் உறவினா் வீட்டு காதுகுத்து விழாவுக்கு கிழக்குராஜபாளையம் வந்துள்ளனா். சில தினங்களில் மனோகரன் திருப்பூா் சென்றுவிட்ட நிலையில், லதா மட்டும்,கிழக்குராஜபாளையத்திலேயே இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை லதா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புகாரின் பேரில், லதாவின் உடலை மீட்ட வீரகனூா் போலீஸாா், வழக்குப் பதிந்து லதாவின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT