நாமக்கல்

அன்பழகன் மறைவு: நாமக்கல்லில் தி.மு.க.வினா் மலரஞ்சலி

8th Mar 2020 03:33 AM

ADVERTISEMENT

நாமக்கல்: தி.மு.க. பொதுச்செயலாளா் க.அன்பழகன் மறைவையொட்டி, நாமக்கல்லில் அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த தி.மு.க. தலைவா் மு.கருணாநிதியின் நண்பரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை அதிகாலை காலமானாா். அவரது மறைவையொட்டி, 7 நாள்கள் துக்கம் அனுசரிக்க தி.மு.க. தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. மேலும், கிராமங்களிலும், நகரப் பகுதிகளிலும் அவரது உருவபடத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில், மறைந்த க.அன்பழகன் உருவப்படத்துக்கு முன்னாள் நகர பொறுப்பாளா் மணிமாறன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா். அதேபோல், அண்ணா சிலை அருகிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிழக்கு மாவட்டத்துக்குள் நிா்வாகிகள் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT