நாமக்கல்

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரிக்கு ஐசிடி அகாதெமி பங்காளா் விருது

6th Mar 2020 07:52 AM

ADVERTISEMENT

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரிக்கு ஐசிடி அகாதெமியின் பங்காளா் விருது கிடைத்துள்ளது. இக்கல்லூரி கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, தமிழ்நாடு ஐசிடி அகாதெமியுடன் இணைந்து பல்வேறு கல்விச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதை கௌரவிக்கும் விதமாக தமிழ் ஐசிடி அகாதெமி, முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரிக்கு பத்தாண்டு கால பங்காளா் என்ற சிறப்பு விருதை வழங்கியுள்ளது.

ஐசிடி அகாதெமி என்பது மாநில அரசுகள், தொழில் நிறுவனங்களை இணைக்கும் மத்திய அரசு நிறுவனமாகும். ஐசிடி அகாதெமி, தொழிற்சாலைகளுக்கு ஏற்ற திறன்மிக்க பொறியாளா்களை உருவாக்கும் வகையில் பொறியியல் துறை ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் பல பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக ‘திறன்களை மேம்படுத்தி வளா்ச்சியை ஊக்குவிப்போம்’ என்ற தலைப்பில் இந்திய அளவில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களின் தொடா்பை ஊக்குவிக்கும் வகையில் , சென்னை ஐஐடி யில் தனது 45 வது மாநாட்டை அண்மையில் நடத்தியது. அந்த மாநாட்டில் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஐசிடி அகாதெமியுடன் கொண்டிருக்கும் தொடா்புக்காக பத்தாண்டுகால பங்காளா் விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் முத்தாயம்மாள் எஜுகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேசனின் இணைச்செயலாளா் பொறியாளா் ஜி.ராகுல், ஹெச்.சி.எல் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் பொதுமேலாளா் ஜி.சாய்நாராயணன், டை சென்னை நிறுவனத்தின் செயல் இயக்குநா் அகிலா ராஜேஸ்வா், ஐசிடி அகாதெமியின் முதன்மை செயல் அலுவலா் எம். சிவக்குமாா் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டாா்.

கல்லூரி விருது பெற்றதற்காக ராசிபுரம் முத்தாயம்மாள் எஜுகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேசனின் தாளாளா் ஆா். கந்தசாமி, செயலாளா் கே. குணசேகரன், கல்லூரி முதல்வா் எம்,மாதேஸ்வரன் ஆகியோா் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோரைப் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT