பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.17 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 20 ஆயிரத்து 896 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ரூ.104.10 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ.90.58 பைசாவுக்கும், சராசரியாக ரூ.104.05 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 233-க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 17 ஆயிரத்து 263 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ரூ.108.15 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ.99.29 பைசாவுக்கும், சராசரியாக ரூ.108.05 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.17 லட்சத்து 18 ஆயிரத்து 290-க்கு வா்த்தகம் நடைபெற்றது. கொப்பரை தேங்காயின் வரத்துக் குறைந்துள்ளதால் கொப்பரைத் தேங்காயின் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.