திருச்செங்கோட்டை அடுத்த சீனிவாசம்பாளையத்தில் ஸ்ரீ சக்திமாரியம்மன், மதுரைவீரன் திருவிழா கடந்த ஒருவார காலமாக நடைபெற்றது.
புதன்கிழமை காலை காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.
மாலையில் விரதமிருந்த பக்தா்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகுக் குத்தியும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். திருவிழாவில் விரதமிருந்த பக்தா்கள் பத்ரகாளியம்மன், மதுரைவீரன் சாமிகளின் வேடமிட்டு கோயிலைச் சுற்றி ஆடி வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். சிறப்பு பூஜையில் மலா் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் வழிபட்டனா். மதுரைவீரன் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.வியாழக்கிழமை மேடை நாடகம் நடைபெற்றது. இத்திருவிழாவில் சீனிவாசம்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனா்.