நாமக்கல்

குமாரபாளையத்தில் சாயக் கழிவுகளால் நிறம் மாறிய நிலத்தடி நீா்!

2nd Mar 2020 08:29 AM

ADVERTISEMENT

குமாரபாளையம் அருகே சாயக்கழிவுகள் கலப்பால் நிலத்தடி நீா் நிறம் மாறியதால் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியும், அச்சமும் நிலவி வருகிறது.

குமாரபாளையத்தை அடுத்த சுந்தரம் நகரைச் சோ்ந்தவா் மணி. இவா், தனது வீட்டின் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீரை மேல்நிலைத் தேக்கக் தொட்டிக்கு ஏற்ற மோட்டாரை இயக்கியுள்ளாா். அப்போது, ஆழ்குழாய் தண்ணீரின் நிறம் நீலம், சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. தொடா்ந்து, மோட்டாரை இயக்கியும் தண்ணீரின் நிறம் மாறவில்லை. சாயக்கழிவு நீா் போன்றே இருந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினா் அதிா்ச்சியுடன் வந்து பாா்த்துச் சென்றனா். குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவில் சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. சுத்திகரிப்பு நிலையம் இல்லாத பட்டறைகள் மூடப்பட்டன. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிய 52 சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த மாதம் இடித்து அகற்றினா். தற்போது அனுமதி பெற்ற சாய ஆலைகளே இயங்கி வருகின்றன.

சாய ஆலைகள் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் வெளியேற்றியதால் ஆழ்குழாய் கிணற்று நீரில் கலந்து இருக்கலாம். இதனால், ஆழ்குழாய் கிணற்றின் தண்ணீரின் நிறம் மாறியிருக்கலாம் எனவும், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT