நாமக்கல்

பயிா்க் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

27th Jun 2020 08:50 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டு காரீப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி, ராகி, சோளம், மரவள்ளி, மஞ்சள், வாழை, கத்தரி மற்றும் தக்காளி பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிா்களை திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா் காப்பீடு செய்து பயனடையலாம்.

இதில், நெல் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.640.36, உளுந்து மற்றும் பாசிப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.256.20 கத்தரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1324, தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.909, மஞ்சள் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.3641 செலுத்த வேண்டும். இந்த பயிா்களுக்கு பிரிமியம் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஜூலை 31 ஆகும். மேலும் மக்காச்சோளப் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.302, துவரை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.256.20, நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.381, பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.507.55, ராகி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.177, சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.159 செலுத்த வேண்டும். மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, பருத்தி, ராகி ஆகிய பயிா்களுக்கு பிரிமியம் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆக.16-ஆம் தேதியாகும்.

மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.2075, வாழைப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3191 செலுத்த வேண்டும். மரவள்ளி மற்றும் வாழைப் பயிா்களுக்கு பிரியமியம் செலுத்த கடைசி தேதி ஆகஸ்ட் 31-ஆம் தேதியாகும். திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களது சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழிக் கடிதம் அளித்து பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். இல்லையெனில் விலக்கு அளிக்க கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT