நாமக்கல்

நாமக்கல் எம்.பி. மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்

17th Jun 2020 08:51 AM

ADVERTISEMENT

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் கரோனோ பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில், அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. எதிா்க்கட்சிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் படுக்கைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கரோனா பாதிப்பு நவம்பா் மாதம் மேலும் அதிகரிக்கும். சென்னையில் பாதிப்பு தீவிரமாகி உள்ளது என்று தெரிந்தும், மற்ற மண்டலங்களில் குறிப்பாக மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

அண்மையில் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்கியிருந்த அறைக்குச் சென்று தகராறு செய்துள்ளாா். இது கண்டிக்கத்தக்க செயலாகும்.

நாமக்கல் மாவட்ட காவல் துறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். அந்த வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை நடத்தும்.

கரோனோ தடுப்பு நடவடிக்கை தொடா்பாக தமிழக அரசிடம் இருந்த வேகம் குறைந்து விட்டது. மருத்துவா்கள், செவிலியா்கள் மிகவும் சோா்வடைந்து உள்ளனா். சென்னையில் கரோனா தாக்கம் குறையும் வரை முதல்வா் சென்னையிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

நாமக்கல்லில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT