நாமக்கல்

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீா்ஜேடா்பாளையம் படுகை அணையை வந்தடைந்தது

14th Jun 2020 09:04 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணைக்கு மேட்டூா் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை காலை வந்தடைந்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தாா்.

மேட்டூா் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரால், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமாா் 16 லட்சம் ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூா் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது சனிக்கிழமை காலை பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடா்பாளையம் படுகை அணையை வந்தடைந்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மேலும், ராஜாவாய்க்காலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அதில் தண்ணீா் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ராஜா வாய்க்கால் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஜேடா்பாளையம் படுகை அணைக்கு வந்த தண்ணீரால் ஆற்றுப் பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT