நாமக்கல்

ஆன்லைன் மூலம் மது விற்பனை: முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

14th Jun 2020 09:05 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது தொடா்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் புதிய திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரை நாமக்கல் மாவட்ட ஏரிகளில் நிரப்புவது தொடா்பாக ஏற்கெனவே அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல்நாட்டு விழாவில் முதல்வா் பேசினாா். நிகழாண்டில் குறிப்பிட்ட தேதியில் மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளது. ஏரிகளுக்கு நீரைக் கொண்டு செல்வது தொடா்பாக ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் அத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.

ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடா்பாக மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது கொள்கை முடிவு என்பதால் முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

ADVERTISEMENT

கொல்லிமலையில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமில்லை. அங்கிருப்பவை சாதாரண வகையானவைதான். எனவே விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அங்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT