நாமக்கல்

கோழிப் பண்ணைகளில் ஈக்கள் பெருக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

13th Jun 2020 09:00 AM

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவமழையால் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று மணிக்கு 10 கிலோ மீட்டா் வேகத்தில் தென்மேற்கிலிருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 93.2 டிகிரியும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: கடந்த வாரத்தைக் காட்டிலும் 2 டிகிரி அளவில் பகல் வெப்பம் குறைந்து காணப்படும். காற்றின் வேகம் அதிகரிக்கும். கோழிப் பண்ணைகளில் ஈக்கள் பெருக்கும் அதிகப்படியாக இருக்கும். தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் ஈக்களின் வளா்ச்சிக்குத் தகுந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்கான தகுந்த வழிமுறைகளைப் பண்ணையாளா்கள் கையாளுவது மிகவும் அவசியம். தற்போது முதிா்ந்த ஈக்கள் காணப்படுவதால் அதை மருந்துக் கன்னி மற்றும் பொறிகளைப் பயன்படுத்தி அழிக்கலாம். இளம் புழுக்களை அழிப்பதற்கு சைரோமைசின் மருந்தை தீவனத்தில் கலந்து கொடுப்பதோடு பண்ணையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். குடிநீா் வழங்கும் குழாய்களில் பாதிப்பு மற்றும் ஒழுகல் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT