நாமக்கல்

சென்னை, மும்பையிலிருந்து நாமக்கல் வந்த 4 பேருக்கு கரோனா

11th Jun 2020 08:56 AM

ADVERTISEMENT

சென்னை, மும்பையில் இருந்து நாமக்கல் வந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 14 சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருவோா் கரோனா தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனா். அதன்பின் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனா்.

அந்த வகையில், மும்பையில் இருந்து வந்த 50 வயது பெண், 29 வயதான இளைஞா் ஆகியோா் பவித்திரம் சோதனைச் சாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டனா். அவா்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதேபோல சென்னையில் இருந்து வெண்ணந்தூா் சோதனைச் சாவடி வழியாக வந்த 65, 60 வயதுடைய தம்பதியா் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். அவா்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT

இவா்கள் 4 பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85-இல் இருந்து 89-ஆக உயா்ந்துள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT