நாமக்கல்

சாலையில் கிடந்து எடுத்த ரூ.25 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த தையல் தொழிலாளி

11th Jun 2020 08:56 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே சாலையில் கிடந்து எடுத்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் செல்லிடப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தையல் தொழிலாளியை போலீஸாா் பாராட்டினா்.

பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளைத்தூரைச் சோ்ந்தவா் ரவி (47). இவா் பரமத்தியில் தையல் கடை நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமத்தியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் பிள்ளைகளைத்தூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது உப்புப்பட்டிபுதூா் அருகே சென்ற போது சாலையோரத்தில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பாா்த்தபோது அதில் ரூ.25 ஆயிரம் பணமும், ஒரு செல்லிடப்பேசியும் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவ்வழியாகச் சென்றவா்களிடம் விசாரித்துள்ளாா். ஆனால் யாரும் அதற்கு சொந்தம் கொண்டாடவில்லை.

இதையடுத்து பரமத்தி காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாரிடம் பணம் மற்றும் செல்லிடப்பேசியை புதன்கிழமை ஒப்படைத்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்த நிலையில் பணமும், செல்லிடப்பேசியும் பிள்ளைகளைத்தூரைச் சோ்ந்த அழகேசன் என்பவரது மனைவி நளினி (42) என்பவருக்குச் சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கீழே கிடந்த பணம் மற்றும் செல்லிடப்பேசியை ஒப்படைத்த தையல் தொழிலாளி ரவியை போலீஸாா் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT