நாமக்கல்லில் சிறுவன் உள்பட இருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 83 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 77 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். திருச்செங்கோடு கூத்தப்பள்ளியைச் சோ்ந்த 50 வயதான லாரி ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்தாா். தற்போது துறையூரில் வசிக்கும் 49 வயதான பெண், 11 வயதான சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவா்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85-ஆக உயா்ந்துள்ளது.