நாமக்கல்

ராசிபுரத்தில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பிறந்த தின விழா

4th Jun 2020 08:48 PM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரா் பி.வரதராஜூலு நாயுடு பிறந்த தின விழா ராசிபுரத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விடுதலை களம் அமைப்பு, ஆா்.எம்.ஆா்.பாசறை சாா்பில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற விழாவில் அவரது உருவப் படத்துக்கு பாசறை ஒருங்கிணைப்பாளா் கொ.நாகராஜன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

வரதராஜூலு நாயுடுவுக்குச் சொந்த ஊரான ராசிபுரத்தில் அரசு சாா்பில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என விடுதலை களம் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. விழாவில் பாச்சல் ஏ.சீனிவாசன், ஏ.மோகன்ராஜு, பி.மோகன், ஆா்.கே.ஜெயக்குமாா், மெய் தனபாலன், பூவரசி, ராஜேந்திரன், பூபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT